எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும் எஸ்ஐபி தான் தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எஸ்ஐபி மூலமாக 5,000 கோடி ரூபாய் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றது. எஸ்ஐபி தான் முதலீட்டாளர்களுக்கான அதிலும் ரிடெய்ல் முதலீட்டாளர்களுக்கான சிறந்த திட்டம் ஆகும்.

எஸ்ஐபி என்றால் என்ன?

எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட தொகையினைத் தொடர் இடைவெளியில் தொடர்ச்சியான காலத்திற்கு முதலீடு செய்யப்படுகின்றது, பொதுவாக ஒவ்வொரு மாதமும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் மூலம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் ஒரு அலகினை முதலீட்டாளர் வாங்குகின்றார் எனலாம். எஸ்ஐபி முதலீட்டாளர்களை எப்போது சந்தையினைக் கண்காணிக்காமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதினை ஊக்குவிக்கின்றது. மேலும் முதலீட்டு முறைக்கு ஒரு ஒழுக்கத்தை எஸ்ஐபி திட்டங்கள் அளிக்கின்றன.Leave a Reply