மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் யாவை?

முதலீட்டுச் சந்தையில் பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன. அவை உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான தேவைகளுக்கு ஏற்ப பொருந்தக்கூடிய பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன.

டீமேட் கணக்கு வழியாக முதலீடு செய்தல்

நீங்கள் ஒரு டீமேட் கணக்கு வைத்திருந்தால், அது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான மிக வசதியான முறைகளில் ஒன்றாகும். இங்கே நீங்கள் தரகு செலுத்த வேண்டும்.

சிலர் சமநிலையான கட்டணத்தை வசூலிக்கின்றனர். சிலர் சதவிகிதத்தின் அடிப்படையில் வசூலிக்கின்றனர். டீமேட் கணக்கின் வழியாகப் பரஸ்பர நிதிகளை நீங்கள் வாங்குதல் மற்றும் விற்றல் மூலமாக, நீங்கள் ஒரே இடத்திலிருந்து அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு… ரிஸ்க்குக்கு ஏற்ப ரிட்டர்ன்!

செல்வத்தைப் பெருக்கும் முதலீடு

1. நாம் கனவு காணும் வாழ்க்கையை வாழ சரியான முதலீடுகள் அவசியம். எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நம்முடைய கனவுகளை நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

2. நாம் செய்யும் ஒவ்வொரு முதலீடுகளையும் தெளிவாக அறிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். முதலீடுகளின் சாதக, பாதகம் அனைத்தையும் தெரிந்து கொண்டால்தான் நம் தேவைக்கேற்ப முதலீடுகளைத் திட்டமிட்டு, நம் முதலீட்டைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

3. உலகில் பெரும் செல்வந்தர்களாக வளர்ந்தவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் எல்லோருக்கும் ஓர் ஒற்றுமை இருக்கும். அதுதான் ரிஸ்க் எடுப்பது. எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறோமோ அவ்வளவு ரிட்டர்ன் கிடைக்கும். ஆனால், நம்முடைய ரிஸ்க் சரியான பாதையில் இருக்க வேண்டும்

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வுசெய்வது எப்படி?

நம்மில் பலரும் வசதியான, நிம்மதியான வாழ்க்கையையே இன்றும் என்றும் வாழ கனவு காண்கிறோம். ஆனால், அந்தக் கனவை உண்மையாக்கிட என்ன செய்திருக்கிறோம். `ஒன்றும் செய்வதில்லை’ என்பதுதான் பலரின் பதில். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் முதலீடு. நம்முடைய ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப முதலீட்டுத் திட்டங்கள் இருப்பது மியூச்சுவல் ஃபண்டில்தான்.

மியூச்சுவல் பண்டுகளில் பலரும் முதலீடு செய்வதற்கான முக்கியக் காரணம், அதிக லாபம் பெற இயலும் என்பதுதான். ஆனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படித் தேர்வுசெய்வது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

முதலீடு செய்து உலகப் புகழ்பெற்ற வாரன் பப்பெட், பல நிறுவனங்களை நடத்திக்கொண்டு வருகிறார். இரண்டே விதிகளைத்தான், அவர் தன் தொழிலாளர்களைப் பின்பற்றுமாறு கூறி, தானும் பின்பற்றுகிறார்.

முதல் விதி: பணத்தை இழக்காதீர்கள்.

இரண்டாம் விதி: முதல் விதியை மறக்காதீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, முதல் விதியின்படி பணத்தை இழக்காமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு முதலீடு என்பது, விதையிடுவதுபோல். நாம் அதன் பலனை அடைய வேண்டுமென்றால், நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எப்படிச் செயல்படுகிறது?

“எந்த ஒரு செயலுக்கும் குறிக்கோள் மிக அவசியம். அதைப்போல முதலீடு செய்யும்போதும் நமது குறிக்கோளைப் பிரதானப்படுத்தி அந்தக் குறிக்கோளுக்கு உதவியாக இருக்கும் முதலீட்டுக்கான ஃபண்ட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.

நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு எந்த மாதிரியான வழியைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிந்துகொள்வது அவசியம்.
உதாரணமாக, ஒருவருக்கு இரண்டு வயதில் மகனோ / மகளோ இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

அவர்களது உயர் கல்விக்கோ, திருமணத்துக்கோ ஒரு பெரிய தொகை வேண்டுமென்றால், அந்தப் பெரிய தொகை எவ்வளவு வேண்டும் என நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

குறைந்தது 16 வருடங்கள், அவர்களுக்கு நீண்டகால குறிக்கோளாக வைத்துக்கொண்டு, ஒரு நல்ல டைவர்சிஃபைட் (diversified) அல்லது குழந்தைகளுக்கு பிரத்யேகமான திட்டத்தில் மாதத்தின் அடிப்படையில் (SIP) முதலீடு செய்தால், அந்த முதலீடு எத்தனை சதவிகிததில் (8%, 10%, 12%) வளர வேண்டும் என்பதற்கான முதலீட்டைத் தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.

இதைத் தெரிந்துகொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டின் உண்மையான நிலையை அறிய மாதாமாதம் அறிக்கையை (Fact Sheet) வெளியிடுகிறார்கள். இதை எல்லோராலும் மிக எளிதாகப் பார்க்க முடியும்Leave a Reply