mkprabha March 31, 2018 No Comments

பங்குகளை வாங்க விற்க…

 • காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச்சந்தை.
 • பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர் ) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச்சந்தையின் ரிஷிமூலம் என்கிறார்கள்.
  ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச்சந்தையின் தொடக்கத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத்துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்' என்று அழைக்கப்பட்டனர். புரோக்கரேஜ் பிசினஸ் இப்படித்தான் ஆரம்பமானது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 31, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்.. PART-2

தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ?


 1. ஒன்று செய்யலாம்...! யாரவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு இறங்கலாம். ஆனால் ஒருவரையோ சிலரையோ பார்ட்னராக வைத்துக்கொள்வதை விட பல பேர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.
 2. எப்படி என்கிறீர்களா..? ஒரு வேளை யாராவது ஒருவரிடம் அதிக பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
 3. ஒரு வேளை நீங்கள் அந்த தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

 4. அதுவே ஆளுக்கு கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படாது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 30, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்..PART-2

 1. பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
 2. இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது.
 3. உணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
 4. உதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம்.
 5. நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 30, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்..

 • முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறிகளை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள்.

 • அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். அனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை.

 • வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 27, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்…..

 • நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல்
  தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!
 • எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.
 • காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன் 

mkprabha March 26, 2018 No Comments

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்

 • வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சதவிகிதம் மிகமிகக் குறைவு. இந்தியாவிலும் தமிழர்களின் பங்கு மிகமிகக் குறைவு.
 • நம் நாடு வளர்ந்த பொருளாதார நாடாக ஆக வேண்டுமெனில், நாம் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
 • பங்குச்சந்தை என்பது ரிஸ்க் நிறைந்ததுதான். ஆனால், அதே அளவுக்கு வருமானத்தையும் தரக்கூடியது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை, அறிந்து ஆராய்ந்து செய்வதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

 

- ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 24, 2018 No Comments

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?


எவ்வளவு அதிகமாகப் பங்கு சந்தையின் முதலீடு நுணுக்கங்கள், பல தரப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அதன் சாத பாதகங்களைத் தெரிந்து கொள்கிறீர்களோ அதே அளவு வெற்றிகளையும் குவிக்கலாம்.

எனவே அதிக அளவு கட்டுரைகளைப் படியுங்கள், திட்டங்கள் பற்றிய முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள், திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளைக் கேளுங்கள், வெற்றி பெற்றவர்கள் செயல் பட்ட விதங்கள் பற்றி ஆராயுங்கள், தினசரி நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள் இவை அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளைக் குவிக்க உதவும்.
-tamilgoodreturns

mkprabha March 21, 2018 No Comments

உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

 • வாரன் பஃபெட் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர், தனது 14 வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
 • தற்பொழுது அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகம்.முதலீடு செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், இளமைப் பருவத்திலேயே முதலீடுகளைத் தொடங்குவது நல்லது, அப்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் போதிய காலம் கிடைக்கும், தொடக்கம் என்பதால் எளிதாகத் தவறை திருத்திக் கொள்ளலாம், அதிக அளவு முதலீடு செய்ய முடியும், முடிவுகளைத் துணிந்து எடுக்க முடியும், எனவே உங்களின் இளமை வயதிலேயே முதலீட்டுக்களைத் தொடங்குங்கள்
mkprabha March 17, 2018 No Comments

வரியும் சேமிக்கலாம்.. பணத்தையும் பெருக்கலாம்

ஒரே சமயத்தில் வரிகளையும் சேமித்து உங்கள் பணத்தையும் பெருக்க விரும்புகிறீர்களா? ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்கு உதவும். மார்ச் மாதம் துவங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் நிதியாண்டில், ஒரே சமயத்தில் பணத்தைச் சேமிக்கவும் வரிகளை மிச்சப்படுத்தும் வகையிலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய இலக்கை அடைய ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் உதவும்

ஈஎல்எஸ்எஸ் திட்டம்

ஈஎல்எஸ்எஸ் திட்டம் என்பது பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டத்தின் சுருக்கப் பெயராகும். குறிப்பாக, இந்தத் திட்டம் பன்முகப்படுத்தப்பட்ட பங்குச் சந்தைத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்.