- பங்குச்சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு.
- நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு.
- ஒரு வீடு வாங்குகிறோம் அதன் மதிப்பு என்ன? என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை .
- அதுபோலத்தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்கும் ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.
- வீடு, நிலத்தில் செய்வது போல நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால் , பங்குச்சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே!
- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்