mkprabha April 5, 2018 No Comments

பங்குச்சந்தை முதலீடு எந்த அளவு பாதுகாப்பானது?

  1. பங்குச்சந்தை என்பது குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்வது போன்ற சூதாட்டமல்ல. அது ஒரு வகையான முதலீடு.
  2. நீண்ட காலத்துக்கு உங்கள் பணத்தைப் போட்டு பொறுமையாகக் காத்திருக்க வேண்டிய முதலீடு.
  3. ஒரு வீடு வாங்குகிறோம் அதன் மதிப்பு என்ன? என்ன என்று தினமும் நாமும் கேட்பதில்லை. நம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இன்று விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என தினமும் கணக்கு போட்டுப் பார்ப்பதில்லை .
  4. அதுபோலத்தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பணமும். தினமும் அதன் மதிப்பை பார்ப்பதால் நமக்கு டென்ஷன்தான் அதிகரிக்கும் ஒழிய, பங்கின் விலை ஏறிவிடாது.
  5. வீடு, நிலத்தில் செய்வது போல நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தீர்களேயானால் , பங்குச்சந்தை முதலீடும் முழுக்க முழுக்க பாதுகாப்பானதே!

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 5, 2018 No Comments

நம் நாட்டில் பங்குச்சந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?

  • கவலையே வேண்டாம்! அடுத்த பதினைந்து வருடங்களுக்கு வளர்ச்சி மிகவும் அபாரமாக இருக்கும்.
  • முதலீட்டாளர்கள் பெரும் அளவு சம்பாதிக்க வாய்ப்புள்ளது.
  • வியாபாரங்களும், அதனால் லாபமும் உயர்வதால் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு உயரும்.
  • உலக அளவில் பெயர் சொல்லக்கூடிய பல பெரிய நிறுவனங்கள் நம் இந்தியாவில் உருவாகும்.
  • பல நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுப்படுத்த, சந்தையில் தங்களது பங்குகளை விற்கும் வெளிப்படைத்தன்மை இன்னும் அதிகரிக்கும்
    முதலீட்டாளர்களின் பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கும்.
  • சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் ஆண்டுகளில் பங்குச்சந்தையின் வளர்ச்சியும் அதனால் முதலீட்டாளர்களின் வளர்ச்சியும் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 5, 2018 No Comments

பங்குச்சந்தையில் என்னென்ன விற்கப்படுகிறது அல்லது வாங்கப்படுகிறது?

நம்மில் பலரும் பங்குச்சந்தை என்றாலே அங்கே பங்கு அல்லது ஷேர் மட்டுமே விற்கப்படுவதாக (அல்லது வாங்கப்படுவதாக ) நினைக்கிறார்கள்.

இது தவறு பங்குச்சந்தையில் நிறுவனங்களின் பங்குகள் வர்த்தகமாகின்றன.

அது தவிர, வேறு சிலவும் வர்த்தகமாகின்றன. அவை

1. கடன் பத்திரங்கள் (அரசாங்கம் மற்றும் தனியார் )
2. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
3. இ .டி .எஃப் -கள் (தங்கம் உட்பட )
4. எஃப் அண்ட் ஓ
5. கரன்சி

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 2, 2018 No Comments

கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை

  • கம்ப்யூட்டரினால் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பெரிய அளவில் மாற்றம் கண்டிருப்பது போல பங்குச் சந்தையும் மாறியிருக்கிறது.
  • முன்பு ஒரு பங்கை வாங்கவோ அல்லது விற்கவோ வேண்டுமெனில் பங்குச்சந்தைக்கே போனால் தான் உண்டு .
  • இப்போது அப்படியில்லை; நம் வீட்டில் இருந்தபடியே எவ்வளவு பங்கை வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம். எல்லாம் கம்ப்யூட்டரின் கைங்கர்யம்!
  • கம்ப்யூட்டர் மூலம் பங்கு பரிவர்த்தனை நடப்பதால் ஏதாவது மோசடி நடந்துவிடுமோ என்கிற பயமும் தேவையில்லை.
  • ஒரு பங்கு வாங்கப்படும்போது, அந்தப் பங்கை யார் வாங்குகிறார்கள்? என்ன விலை ? எந்த நொடியில் வாங்கப்பட்டது என்கிற அளவுக்கு துல்லியமான தகவல்கள் நமக்கு கிடைத்துவிடும்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 31, 2018 No Comments

பங்குகளை வாங்க விற்க…

  • காய்கறி வாங்க அல்லது விற்க காய்கறி சந்தை இருக்கிற மாதிரி, பங்குகளை வாங்க, விற்பதற்கான இடம்தான் பங்குச்சந்தை.
  • பதினோராம் நூற்றாண்டில் கெய்ரோவில் (எகிப்து நாட்டின் தற்போதைய தலைநகர் ) யூத மற்றும் முகலாய வியாபாரிகள் இடையே இருந்த கொடுக்கல் வாங்கல்தான் பங்குச்சந்தையின் ரிஷிமூலம் என்கிறார்கள்.
    ஆனால் பெரும்பாலான தகவல்கள், பங்குச்சந்தையின் தொடக்கத்தை பன்னிரெண்டாம் நூற்றாண்டு பிரான்ஸ் நாட்டை சுட்டிக் காட்டுகின்றன. அந்த சமயத்தில் வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுத்ததை முறைப்படுத்துவதற்காக கமிஷன் அடிப்படையில் சிலரை வேலைக்கு அமர்த்தியது. இவர்கள் 'புரோக்கர்கள்' என்று அழைக்கப்பட்டனர். புரோக்கரேஜ் பிசினஸ் இப்படித்தான் ஆரம்பமானது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 31, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்.. PART-2

தொழிலை விரிவுபடுத்த நிறைய பணம் தேவைப்படுகிறது. கையில் அவ்வளவு பணம் இல்லை, கடன் வாங்கி தொழில் இறங்கவும் விருப்பமில்லை. இது போன்ற நிலையில் என்ன செய்வது ?


  1. ஒன்று செய்யலாம்...! யாரவது ஒருவரையோ அல்லது சிலரையோ உங்கள் தொழிலில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டு இறங்கலாம். ஆனால் ஒருவரையோ சிலரையோ பார்ட்னராக வைத்துக்கொள்வதை விட பல பேர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்வது தான் புத்திசாலித்தனம்.
  2. எப்படி என்கிறீர்களா..? ஒரு வேளை யாராவது ஒருவரிடம் அதிக பங்குகள் இருந்தது என்றால் பின்னாளில் அவர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.
  3. ஒரு வேளை நீங்கள் அந்த தொழிலை விட்டே வெளியேற வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

  4. அதுவே ஆளுக்கு கொஞ்சமாக நிறைய பேர்கள் பங்குகளை வைத்திருந்தால் அவர்களால் உங்களுடைய தொழிலுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்படாது.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 30, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்..PART-2

  1. பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலக்கட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
  2. இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது.
  3. உணவு பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாவசமான ஒவ்வொன்றும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.
  4. உதாரணமாக கடந்த ஆண்டு வாங்கிய பொருள் ரூ .10 அதாவது 10% விலை உயர்ந்திருக்கிறது.இதைத்தான் நாம் பணவீக்கம் என்று சொல்கிறோம்.
  5. நீங்கள் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் உங்கள் பணம் இந்த பணவீக்க விகிதத்தை தாண்டி வருமானம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 30, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்..

  • முன்பெல்லாம் காய்கறி வாங்க வேண்டும் என்றால் கடைக்குத்தான் போயாக வேண்டும். ஆனால் இப்போது பெரிய நகரங்களில் ஒரு போன் செய்தாலே நாம் கேட்கிற காய்கறிகளை நம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துவிடுகிறார்கள்.

  • அது மாதிரிதான் முன்பெல்லாம், பங்குச் சந்தைக்கு நேரடியாகப் போய்த்தான் பங்குகளை வாங்க வேண்டும் அல்லது விற்க வேண்டும். அனால் இப்போது நாம் எங்கும் அலைய வேண்டியதில்லை.

  • வீட்டில் இருந்தபடியே பங்குச்சந்தை புரோக்கருக்கு ஒரு போன் செய்தால் போதும்; நமக்குத் தேவையான பங்கை வாங்கித் தந்துவிடுவார், அல்லது விற்றுக் கொடுத்துவிடுவார்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha March 27, 2018 No Comments

ஷேர் மார்க்கெட் என்றால்…..

  • நிறைய பேர்களுக்கு ஷேர் மார்க்கெட்டில் இறங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட, அது புரிந்து கொள்வதற்கு கஷ்டமான விஷயம் என்று நினைத்து ஒதுங்கிவிடுகிறார்கள். இது தவறான எண்ணம்! உண்மையில் ஒரு பள்ளி மாணவன்கூட பங்குச்சந்தை பற்றி எந்தக் குழப்பமும் இல்லாமல்
    தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்!
  • எல்லா ஊர்களிலும் இருக்கும் காய்கறி மார்க்கெட் போன்றதுதான் பங்குச்சந்தையும். காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வார்கள். பங்குச்சந்தையில் ஒரு கம்பெனியின் பங்குகளை விற்பனை செய்வார்கள்.
  • காய்கறி மார்க்கெட்டில், 'அரைக் கிலோ கத்தரிக்காய் போடுங்க என்கிற மாதிரி, '100 அசோக் லேலண்ட் பங்கு கொடுங்க; 100 இந்தியன் பேங்க் கொடுங்க என்று வாங்கலாம். பங்குச்சந்தையில் இன்னொரு வசதி, வாங்கிய பங்குகள் வேண்டாம் என்று நினைத்தால் உடனே விற்கவும் செய்யலாம்.

-ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன் 

mkprabha March 26, 2018 No Comments

உங்கள் செல்வம் நாட்டின் செல்வம்

  • வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் சதவிகிதம் மிகமிகக் குறைவு. இந்தியாவிலும் தமிழர்களின் பங்கு மிகமிகக் குறைவு.
  • நம் நாடு வளர்ந்த பொருளாதார நாடாக ஆக வேண்டுமெனில், நாம் பங்குச்சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.
  • பங்குச்சந்தை என்பது ரிஸ்க் நிறைந்ததுதான். ஆனால், அதே அளவுக்கு வருமானத்தையும் தரக்கூடியது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை, அறிந்து ஆராய்ந்து செய்வதன் மூலம் குறைத்துக்கொள்ளலாம்.

 

- ஷேர் மார்க்கெட் A to Zசொக்கலிங்கம் பழனியப்பன்