mkprabha April 18, 2018 No Comments

புரோக்கிங் அக்கவுன்டைத் திறக்க என்னென்ன தேவை?

1. விண்ணப்பம் (இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் நீங்கள் கையெழுத்துப் போட வேண்டும்!)

2. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் + நாமினி புகைப்படம்.

3. பான் கார்டு நகல்.

4. அட்ரஸ் புரூப்

5. வங்கிக்கணக்கு.

6. கணக்கு திறப்பதற்கான கட்டணம்.

மேற்சொன்னவை அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா? இல்லை என்றால் உடனடியாக அதைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்குங்கள்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 16, 2018 No Comments

டீமேட் கணக்குகளை யார் பராமரிக்கிறார்கள்?

  • என்.எஸ்.டி .எல். மற்றும் சி.டி.எஸ்.எல். (NSDL & CDSL) என்ற இரு நிறுவனங்கள் தான் இந்தியாவில் உள்ள அனைத்து டிமேட் கணக்குகளையும் வைத்துக் கொண்டு பராமரித்து வருகிறது.
  • முதலீட்டாளர்களுக்கு, இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையில் டி. பி (DP – Depository Participant) என்பவர் இருப்பார். இந்த டீ.பி பெரும்பாலும் உங்களது புரோக்கராகவே இருப்பார்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 14, 2018 No Comments

டிமேட் அக்கவுன்ட் …?

  • நீங்கள் வாங்கும் பங்குகளை உங்களுக்கென இருக்கும் அக்கவுன்டில் வைத்திருக்கத் தான் இந்த டிமேட் கணக்கு.
  • நீங்கள் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கைப் போலவோ அல்லது லாக்கர் போலவோ இந்தக் கணக்கை நினைத்துக் கொள்ளலாம்.
  • டிரேடிங் கணக்கு என்றால்...?
    புரோக்கரிடம் நீங்கள் வைத்துள்ள டிரேடிங் கணக்கில் பணம் செலுத்தி பங்கை வாங்கவோ, விற்கவோ செய்வீர்கள். அவ்வாறு நீங்கள் வாங்கிய பங்குகள் உங்கள் டிமேட் கணக்கில் வரவாகி விடும். அதேபோல் நீங்கள் பங்குகளை விற்கும்போது உங்கள் டிமேட் கணக்கில் இருந்து விற்ற பங்குகளை கழித்துவிட்டு, அந்த பங்குகளை வாங்கியவர் கணக்கிற்கு மாற்றப்படும்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 13, 2018 No Comments

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா?

  • டிமேட் அக்கவுன்ட் open செய்யுங்கள்
    பங்குச்சந்தை என்பது ஒரு நீண்டகால முதலீடு.
  • குதிரை ரேஸ் போல சூதாட்டமல்ல. நினைத்தமாத்திரத்தில் பங்குச்சந்தையில் குதித்து விட முடியாது. ஒரு வங்கியில் பணம் சேமிப்பதற்கு முன்பு ஒரு கணக்கு ஆரம்பிக்கிற மாதிரி பங்குச்சந்தையில் இறங்குவதற்கு இரண்டு கணக்குகளைத் தொடங்க வேண்டும்.
  • டீமேட் அக்கவுன்ட் மற்றும் புரோக்கிங் அக்கவுன்ட் என்ற இரண்டு தான் அவை. பங்குகளை வாங்கி, விற்க இந்த இரண்டு வகையான அக்கவுன்டுகள் தேவை.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 12, 2018 No Comments

பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

  • பங்குச்சந்தை முதலீட்டில் ஒவ்வொரு மனிதனும் கட்டாயமாக ஈடுபட வேண்டும். ஏனென்றால் அந்த முதலீட்டினால் நீங்கள் உலகப் பொருளாதாரத்தோடு உறவு உண்டாக்கிக் கொள்வீர்கள்.நிறுவனங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறீர்கள்.
  • பல வகையான தொழில்களைப் பற்றி, நடப்புக்களைப் பற்றி, வாய்ப்புகளைப் பற்றி, புதிய தொழில்களைப் பற்றி, நிர்வாகம் பற்றி, உலக நிறுவனங்களைப் பற்றி தெரிந்துகொள்கிறீர்கள்.
  • பங்கு முதலீட்டினால் லாபம் வருவது ஒருபுறமிருக்க, அதன் மூலம் கிடைக்கும் அனுபவம், லாபத்தைவிட முக்கியம்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 10, 2018 No Comments

நான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டும்?

  • பங்குச் சந்தை முதலீடு இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம்.
  • இன்று இந்தியப் பொருளாதாரம் படுவேகமாக வளர்கிறது. இந்த வளர்ச்சியினால், உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி அதிகமாகி இருக்கிறது.
  • உணவுப் பொருட்கள் விலையேற்றம், வீட்டு விலை மற்றும் வாடகை உயர்வு என அத்தியாசியவமான ஒவ்வொன்றும் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது.
  • உதாரணமாக, கடந்த ஆண்டு ₹10 கொடுத்து வாங்கிய பொருள் இன்று ₹11.இதைத்தான் நாம் பணவீக்கம் என்கிறோம்.
  • பணவீக்கத்தை வெல்லக்கூடிய ஒரு நல்ல முதலீடு பங்கு சார்ந்த முதலீடு என்பது உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.
  • சரியான பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தல் உங்கள் வருமானம் நிச்சயமாக பணவீக்கத்தை தாண்டியதாகத்தான் இருக்கும்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு இதுவே முக்கிய காரணம்.


- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 9, 2018 No Comments

“பங்கு சந்தை முதலீட்டின் மூலம் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாக விரும்புகிறேன். இது சாத்தியமா?”

  • பங்கு சந்தை பற்றி நம் மக்களிடம் பரவலாக இரண்டு விதமான கருத்துகள்தான் இருக்கிறது. ஒன்று, அது சூதாட்டம். மற்றொன்று; குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகும் வழி.
  • இந்த இரண்டு அணுகுமுறையும் தவறு. பங்குச் சந்தை முதலீடு நீண்ட கால முதலீடு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
  • ஒரு தொழிலை செய்ய ஆரம்பிக்கிறீர்கள். அந்தத் தொழிலை பற்றி அனைத்து விஷயங்களையும் முழுவதுமாகத் தெரிந்து கொள்ள உங்களுக்கு சில ஆண்டுகள் பிடிக்கிற மாதிரிதான் பங்குச் சந்தை முதலீடும் சில ஆண்டுகள் தேவைப்படும்.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்

mkprabha April 7, 2018 No Comments

முதலீட்டாளர் கவனத்திற்கு…

  • நீங்கள் வீடு வாங்கும்போது சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு அந்த வீடு தகுதியானதா, இன்னும் குறைவான விலைக்கு வாங்க முடியுமா என பல கோணங்களில் சிந்தித்து வாங்குகிற மாதிரி பங்குகளையும் பல விதங்களில் ஆராய்ந்து வாங்கினால் உங்களுக்கு இழப்பு வர வாய்ப்பேயில்லை.
  • ஆனாலும் பங்குச்சந்தையில் பலரும் ஏமாறக் காரணம் சரியான வழிகாட்டி இல்லாததுதான். அல்லது போதிய அனுபவம் இல்லாமல் தினசரி வர்த்தகத்தில் ஈடுபட்டால்தான்.
  • இந்த இரண்டையும் நீக்கி விட்டு, முறையான வழிகளைக் கையாண்டு முதலீடு செய்து, பொறுமையாக இருந்தால் நீங்களும் ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் ஆவது உறுதி.

- ஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன்